இந்தோனீசிய பணய கைதிகள் மூவரை விடுவித்த பிலிப்பைன்ஸ் கிளர்ச்சியாளர்கள்

பிலிப்பைன்ஸிலுள்ள கிளர்ச்சியாளர்கள் மூன்று மாதத்திற்கு முன்னதாக கடத்திய மூன்று இந்தோனீசிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Abu Sayyaf
Image caption தனியொரு முஸ்லிம் தாயகத்தை நிறுவ உருவான அபு சயாஃப் என்ற இஸ்லாமியவாதக் குழு, அதனுடைய பரப்புரைக்காக பணய கைதிகளால் கிடைக்கின்ற தொகையை நம்பியுள்ளது

கடந்த இரண்டு வாரங்களில் ஒன்பது கைதிகளை அபு சயாஃப் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் தனியொரு முஸ்லிம் தாயகத்தை நிறுவ இந்த இஸ்லாமியவாதக் குழு உருவாக்கப்பட்டது.

ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல பணத்திற்காக மனிதரை கடத்துவதற்கு பேர்பெற்ற குழுவாகிவிட்டது.

இந்த இந்தோனீசியர்களை விடுவிக்க பணம் வழங்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்