பல் மத நம்பிக்கைகள் கொண்ட அஜர்பைஜான் சமூகங்களை ஊக்கமூட்டும் நோக்கில் போப் பயணம்

அஜர்பைஜானில் பல் மத நம்பிக்கைகள் கொண்ட சமூகத்தை ஊக்கமூட்டும் நோக்கிலான பயணம் ஒன்றிற்காக போப் பிரான்சிஸ், அந்நாட்டின் தலைநகர் பாகூவை சென்றடைந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை VINCENZO PINTO
Image caption திபிலிசியில் விளையாட்டு அரங்கில் போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய திருப்பலி பூசை

2002 ஆம் ஆண்டு புனித இரண்டாம் ஜான் பால் அஜர்பைஜானில் பயணம் மேற்கொண்ட பின்னர் கட்டப்பட்ட ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் திருப்பலி பூசை நிறைவேற்றுவார்.

ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் அஜர்பைஜானில் 500 பேர் என மதிப்பிடப்பட்டுள்ள சிறிய அளவில் கத்தோலிக்க மக்கள் குழுவினர் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption வெள்ளிக்கிழமை திபிலிசியில் போப் பிரான்சிஸை வரவேற்கும் முதுபெரும் தந்தை இலியா

ஞாயிற்றுக்கிழமை இரவு ரோம் திரும்புவதற்கு முன்னர், முக்கிய மத நம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகளையும், அதிபர் இல்காம் அலியீவையும் போப் பிரான்சிஸ் சந்திப்பார்.

சனிக்கிழமை அன்று ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் திறந்த வெளியில் போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய திருப்பலி பூசையில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்