சுறா தாக்குதல்கள் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்து நியூ சவுத் வேல்ஸ்

நீர் சறுக்கு விளையாடிய பதின்ம வயதினர் ஒருவரை காயப்படுத்தியது மற்றும் சுறாக்கள் பார்வையில் தென்படுவது அதிகரித்திருப்பது ஆகியவற்றை தொடர்ந்து, சுறாக்களின் தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அதிகரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுறா தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மிதக்கின்ற பீப்பாய்களில் வரிசையாக இணைக்கப்பட்ட இரை தூண்டில்களை பயன்படுத்தி, சுறாக்களை பிடித்து, அடையாளம் பதித்து, இடம்மாற்றி விடுகின்ற திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சுறாக்களை பிடிப்பதற்கு இந்த திட்டம் வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை உயிரினங்களை காயப்படுத்தும் என வனவிலங்கு பாதுகாப்பாளர்கள் விமர்சனம் செய்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்