ஐ .எஸ். குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 6 பாலத்தீனர்களை இஸ்ரேல் அதிகாரிகள் கைது

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஆறு பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் அதிகாரிகள், தாக்குதல்களுக்கு திட்டமிடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.

Image caption கிழக்கு ஜெருசேலம்

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசேல பகுதிவாசிகள் ஆவர்.

இவர்களில் சிலர் ஐ.எஸ். தீவிரவாத குழுவுடன் இணைந்து போரிட சிரியாவுக்கு செல்ல விரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆனால், இவை சாத்தியமற்றவை என்பதை உணர்ந்த பின்னர், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்களில், குண்டுவெடிப்புகள் நடத்த சதித்திட்டம் தீட்டவும், மற்ற வன்முறை செயல்களில் ஈடுபடவும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்