புகைப்படக் கண்களில் கடந்த வாரம்

கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த செய்தி புகைப்படங்கள்

லிவர்பூலில் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டின் இறுதி நாளில் தலைவர் ஜெரமி கார்பின் முக்கிய உரையாற்றுகிறார். L படத்தின் காப்புரிமை Danny Lawson / PA
Image caption பிரிட்டன் தொழிலாளர் கட்சி பொது தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெரமி கார்பின் தெரிவித்திருக்கிறார். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுகின்ற வாக்காளர்களை கவனத்தில் கொள்வதன் மூலம் அதிக ஆதரவை உருவாக்க முடியும் என்று லிவர்பூலில் நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டின் முடிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் டிரம்போடு கைகுலுக்குகிறார். படத்தின் காப்புரிமை Joe Raedle / Getty Images
Image caption தொலைக்காட்சி விவாதத்தில் அமெரிக்காவின் இரு முக்கிய அதிபர் வேட்பாளர்கள் வேலைவாய்ப்பு, பயங்கரவாதம் மற்றும் இனவாதம் பற்றிய கருத்துக்களோடு மோதி கொண்டனர். அதிபராக இருப்பதற்கு சரியான மனநிலை ஹிலரியிடம் இல்லை என்று குடியரசு கட்சியின் டோனால்ட் டிரம்ப் தெரிவித்த பிறகு, தனிப்பட முறையில் சொல் தாக்குதல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் டிரம்ப் வரி செலுத்திய விபரங்களை வெளியிட மறுப்பதை ஹிலரி சுட்டிக்காட்டினார்.
தென் ஆப்ரிக்காவின் கேப் டவுணில் பழமையான பெருக்கடல் போட்டியில் விரைகின்ற பாய்மரப் படகு. படத்தின் காப்புரிமை Nic Bothma / EPA
Image caption தென் ஆப்ரிக்காவின், சீமோன்ஸ் டவுன் மற்றும் மோசெல் விரிகுடாவுக்கு இடையில் நடைபெறும் 200 கி.மீ கடல் மைல் தொலைவு பாய்மரப் படகு போட்டியின்போது, ஆப்பிரிக்க கண்டத்தின் முனையில் இருக்கும் பயணத்திற்கு கடினமான அகுல்ஹாஸ் முனையை சுற்றி விரைகின்ற பாய்மரப் படகு.
வானில் மிதந்தபடி வான்குடை (பாரசூட்) மூலம் நிகழ்த்தப்பட்ட சாகசங்களை பார்த்து ஆரவாரிக்கும் பார்வையாளர்கள். படத்தின் காப்புரிமை Ed Jones / AFP
Image caption ஐந்தாவது அணுகுண்டு சோதனையை நடத்திய சில வாரங்களில், வட கொரியா , சிவிலியன் மற்றும் ராணுவ விமானங்களின் சாகசக் காட்சியை பொது மக்கள் முன்னிலையில் முதல் முறையாக வொன்சானில் நடத்திக் காட்டியது.
அன்தியா ஹெமில்டன் படைப்பிற்கு நடுவில் கலைக்கூடத்தின் உதவியாளர். படத்தின் காப்புரிமை Neil Hall / Reuters
Image caption இந்த ஆண்டின் டர்னர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நான்கு ஓவியர்களில் அன்தியா ஹெமில்டன் ஒருவர். அவருடைய படைப்பு லண்டனிலுள்ள டேட் பிரிட்டன் ஓவியக் கலைக்கூடத்தின் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் வெற்றியாளர் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படுவார்.
வட்டவடிவ கம்பி சக்கரத்தில் பயிற்சி எடுக்கும் ஏரியல் இமிரி படத்தின் காப்புரிமை Jim Young / Reuters
Image caption அமெரிக்காவின் ஷிகாகோவில் தேவாலயமாக இருந்து மாற்றப்பட்ட அலோஃப்ட் லோஃப்ட் சர்க்கஸ் பயிற்சி மற்றும் கற்பித்தல் பள்ளியில், வட்டவடிவ கம்பி சக்கரத்தில் பயிற்சி எடுக்கும் ஏரியல் இமிரி
கிராஸ் தி லன்ஸி போட்டியில் கலந்து கொண்டோர் தடைகளை தாண்டி செல்வது. படத்தின் காப்புரிமை Jan Woitas / EPA
Image caption ஜெர்மனியிலுள்ள மார்க்கலீபெர்கரில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கிராஸ் தி லன்ஸி போட்டியில் மூவாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.
சேறு வழியாக போட்டியின் தூரத்தை கடக்கும் பங்கேற்பாளர்கள் படத்தின் காப்புரிமை Charles McQuillan / Getty Images
Image caption வட அயர்லாந்தின் போர்டாடவுணில் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக நடைபெற்ற அறக்கொடை ஓட்டப்போட்டியில், வயல்கள், ஆறுகள், சேறு பகுதிகள், மண்துளைகள் மற்றும் தடைகளை தாண்டி ஓடுவதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கேம்பிரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம் மற்றம் அவரது மனைவி கேட் வில்லியம் படத்தின் காப்புரிமை Darryl Dyck / The Canadian Press via AP
Image caption கனடாவுக்கு அரச சுற்றுலா சென்றபோது, கேம்பிரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் வில்லியம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெல்லா பெல்லாவின் ஹெயில்சுக் மக்களால் வரவேற்கப்பட்டனர். பாரம்பரிய போர்வைகளால் போர்த்தப்பட்ட அவர்கள், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லெட்க்கான நடன ஆடைகளை பெற்றனர்.
ஜப்பானின் மிசாகி கிராமத்தில் தேர் தூக்கி செல்லப்படுகிறது. படத்தின் காப்புரிமை Everett Kennedy Brown / EPA
Image caption ஆண்டுதோறும் நடைபெறும் அறுவடை விழாவின்போது ஜப்பானின் மிசாகி கிராமத்தில் தேர் தூக்கி செல்லப்படுகிறது.

All photographs are copyrighted.

தொடர்புடைய தலைப்புகள்