அமைதி உடன்படிக்கையை நிராகரித்தனர் கொலம்பிய மக்கள்

கொலம்பிய அரசுக்கும், ஃபார்க் இயக்கத்திற்கும் இடையே எட்டப்பட்டுள்ள அடையாள முக்கியத்துவம் வாய்ந்த அமைதி உடன்படிக்கையை மிகவும் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் கொலம்பிய மக்கள் நிராகரித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வாக்கெடுப்பு முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மிகவும் நெருக்கிய வித்தியாசமுடன் இருந்தது, கொலம்பிய மக்கள் பலரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

நேற்று நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 13 மில்லியனுக்கு அதிகமானோர் வாக்களித்தனர். ஆனால், 60 ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், ஒப்பந்தத்தை நிராகரிக்கும் தரப்பு வென்றது.

படத்தின் காப்புரிமை Inpho
Image caption இந்த அமைதி உடன்படிக்கை உலகிலேயே நீண்டகாலம் நடைபெற்ற கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது

கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் ஃபார்க் தலைவரோடு இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ், தான் பதவி விலக போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமைதி உடன்படிக்கை வாக்கெடுப்பில் முடிவை அறிந்தவுடன் பலரும் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

ஐந்து தசாப்தகால வன்முறையை போர்நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்த பதவியில் இருக்கும் கடைசி நாள் வரை அமைதிக்காக உழைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஃபார்க் இயக்கத்தோடு அமைதி உடன்படிக்கையை ஆதரிப்போர் முடிவுவை அறிந்து வாயடைத்து போயினர்

இந்த முடிவில் வருத்தம் அடைவதாக தெரிவித்திருக்கும் டிமோசென்கோ என்றியப்படும் ஃபார்க் குழுவின் தலைவர், தானும் அமைதியை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 40 சதவீதத்திற்கும் குறைவானோரே வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்