துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட கிம் கர்டாஷியன்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிம் கர்டாஷியன்

அமெரிக்காவின் ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கிம் கர்டாஷியன் பாரிஸில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாவும், ஆனால் கிம்மிற்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் பாரிஸ் நகர போலிசார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் ஃபேஷன் வீக் என்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஒரு அறையில் கிம் தங்கியிருந்ததாகவும், போலிஸ் போல உடையணிந்த , முகமூடியணிந்த நபர்கள் கிம் அறைக்குள் நுழைந்ததாகவும் கிம்மின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராப் பாடகர் கன்யா வெஸ்ட்

இந்த சம்பவம் அவரை தீவிர அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிம் கர்டாஷியனின் கணவரும், ராப் பாடகருமான கன்யா வெஸ்ட் இச்சம்பவத்தை பற்றி கேள்விப்பட்ட உடன், நியுயார்க்கில் நடைபெற்று கொண்டிருந்த தன்னுடைய நிகழ்ச்சியை திடீரென நிறுத்தினார்.

தொடர்புடைய தலைப்புகள்