ஜமைக்காவை தாக்கிவிட்டு ஹேய்ட்டியை நோக்கி நகரும் மாத்யூ சூறாவளி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கரிபியன் பகுதியை கடக்கும் சூறாவளி

சமீப ஆண்டுகளில் உருவான மிக சக்தி வாய்ந்த அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்று கரிபியன் பகுதியை கடந்து கொண்டிருக்கிறது.

ஜமைக்காவின் பல பகுதிகள் ஏற்கெனவே மழை மற்றும் பலமான காற்று காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போதுமான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்க பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்

ஜமைக்காவின் தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹேய்ட்டியிலும் சூறாவளி எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஜமைக்காவைவிட அதிக ஆபத்தை ஹேய்ட்டி எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.

போதுமான உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும் ஹேய்ட்டியில் உள்ள பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஹேய்ட்டி மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மாத்யூ சூறாவளி கிழக்கு கியூபாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்