ஜப்பானிய செல் உயிரியல் ஆராய்ச்சியாளருக்கு நோபல் பரிசு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் யோஷிநோரி ஒசுமி

2016 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் யோஷிநோரி ஒசுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் யோஷிநோரி ஓசுமி

ஆட்டோஃபேகி என்றழைக்கப்படும் செல்களின் சீரழிவு மற்றும் மறுசுழற்சி குறித்த ஆய்வுப் பணிக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நோபல் பரிசு

செல்லில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொற்றுகள் காரணமாக ஏற்படுகின்ற பார்கின்சன்ஸ், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்கள் உட்பட பல செயல்முறைகளை புரிய வைக்க யோஷிநோரியின் கண்டுபிடிப்புகள் உதவியதாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்