யானைத்தந்த வர்த்தத்தை மீண்டும் தொடங்கும் கோரிக்கை நிராகரிப்பு

சர்வதேச அளவில் யானத்தந்த வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என நமீபியாவும், ஜிம்பாப்வேயும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஃப்ரிக்க யானைகள்

ஆஃப்ரிக்க யானைகளை பாதுகாப்பது குறித்து ஜொஹனஸ்பர்கில் நடைபெற்ற சர்வதேச வனவிலங்கு மாநாட்டில் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமது நாடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு யானைகளின் தொகை இருப்பதால், தம்மால் தந்த ஏற்றுமதியில் ஈடுபட முடியும் என அவ்விரு நாடுகளும் வாதிட்டன.

சர்வதேச அளவில் சட்டவிரோத யானை வேட்டையைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், உள்ளூர்களிலுள்ள அனைத்து யானைத்தந்த சந்தைகளும் மூடப்படவேண்டும் என அம்மாநாட்டில் பங்குபெறுவோர் கடந்த ஞாயிறன்று கோரினர்.

அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களை பாதுக்காக்கும் அமைப்பான 'சைட்டஸால்' அந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம் எந்நாட்டையும் சட்டரீதியாக கட்டுப்படுத்தாது.

கடந்த சில ஆண்டுகளில் ஆஃப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டன.