வரி குறைவாக செலுத்தியதில் பெருமைப்படும் டிரம்ப்

வரி செலுத்திய விபரங்களை வெளியிட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், சட்டத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி சட்டப்படியாக குறைவான வரியை செலுத்தி இருப்பதை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA / AFP
Image caption டிரம்ப் 18 ஆண்டுகள் சரியாக வரி செலுத்தாமல் இருந்திருக்கலாம் என தென்படுவதால், அவரை தில்லுமுல்லு அமைப்பின் அடையாளம் என்று ஹிலரி தாக்கி பேசியுள்ளார்

ஒரு வர்த்தகராக அவருக்கும், அவருடைய முதலீட்டாளருக்கும், தொழிலாளர்களுக்கும் பயன் தரும் வகையில் வரி செலுத்தும் சட்டத்தை பயன்படுத்தி கொள்வது தன்னுடைய கடமை என்று கோலோராடோ மாநிலத்தில் புவெப்லோவில் ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வரி பணம் செலவழிக்கப்படும் விதத்தை வெறுப்பதாக அவர் கூறினார்.

வரி வசூலிப்பு சட்டத்தின் ஒவ்வொரு அம்சங்கள் மூலமும் டிரம்ப் ஆதாயத்தை பெற்றிருப்பதாக அவரது போட்டி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய வர்த்தகப் பாதையில் டிரம்ப் சிறு வியாபாரங்களையும், தொழிலாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று ஹிலரி ஒகியோவின் அக்ரோனில் பேரணியில் பேசியபோது கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்