ஹேய்ட்டியை நெருங்குகிறது மேத்யூ சூறாவளி

சமீபஆண்டுகளில் அட்லாண்டிக் பகுதியில் வீசிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஒன்று, இன்னும் சற்று நேரத்தில் ஹேய்ட்டியை தாக்குகின்றபோது மாபெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image caption செயற்கைக் கோள் படம் பிடித்த மேத்யூ சூறாவளி

மேத்யூ சூறாவளி ஏற்கெனவே கனமழையையும், புயல் அலைகளையும் உருவாக்கியுள்ளது,

படத்தின் காப்புரிமை AP
Image caption மக்கள் வீடுகளை விட்டு வெளியேற ஹேய்ட்டியின் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்

கடற்கரையோர பகுதிகளில் பாதிக்கப்படும் மக்கள் உள்நாட்டு பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தீவின் சில பகுதிகள் மேத்யூ சூறாவளியின் பாதிப்புக்களை ஏற்கெனவே உணரத்தொடங்கிவிட்டன

ஆனால், சிலர் தங்கள் வீடுகளை விட்டுச் செல்ல தயங்குகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

வரவிருக்கும் நாள்களில் வருகின்ற புயலை சந்திக்க பஹாமாஸ், கியூபா மற்றும் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஆகியவை தங்களை தயார்படுத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஜமைக்காவும் மேத்யூ சூறாவளியின் விளைவுகளை உணர்கின்றது

ஃபுளோரிடாவும், வட கரோலினாவும் கடற்கரையோர பகுதிகளில் அவசர நிலையை அறிவித்திருக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்