ஆப்கானில் தாலிபான் தாக்குதல் முறியடிப்பு : ஆப்கான் குண்டூஸ் மாகாண ஆளுநர்

ஆப்கானிஸ்தானில் திங்களன்று குண்டுஸ் மாகாண தலைநகரில் தொடங்கிய தலிபான் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BASHIR SAFAI/AFP/Getty Images)
Image caption தாலிபான் தாக்குதல் முறியடிப்பு ( கோப்புப்படம்)

தாலிபான் குழுவை சேர்ந்தவர்கள் பெருந்தொகையானவர்கள் இறந்துள்ளனர் என்று ஆளுநர் அசதுல்லா அமார்க்கில் கூறினார். அவர் குண்டுஸ் நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட வாழக்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

போலிசார் தாங்கள் இன்னும் எதிர்ப்பு இருக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட பகுதிகளைத் தேடிவருவதாக, ஒரு போலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தங்களுக்கு அமெரிக்காவின் சிறப்புப் படை ஆதரவு அளிக்கப்படுவதாகவும், விமானப் படை ஆதரவும் உள்ளது என்றும் ஜெனரல் முகமது காசிம் ஜங்கள்பாக் கூறினார்.

கடந்த ஆண்டு சிறிது காலம் குண்டுஸ் நகரம் தாலிபானின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அரசாங்கப் படைகளால் அது மீண்டும் கைப்பற்றப்பட்டது.