டுடெர்டோவின் உறுதிமொழியையும் மீறித் தொடரும் அமெரிக்க பிலிப்பைன்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அமெரிக்காவுடனான போர்ப் பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறியபோதும், பிலிப்பைன்ஸும் அமெரிக்காவும் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை TED ALJIBE/AFP/Getty Images
Image caption 2015ல் போர் பயிற்சியில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர். (கோப்புப்படம்)

இந்த கூட்டு ராணுவ பயிற்சிதான் அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் நடத்தும் கடைசி பயிற்சியாக இருக்கும் என்று அதிபர் டுடெர்டோ கூறினார். இதன் மூலம், தனது நாட்டை விட்டு அமெரிக்கப் படைகளை வெளியேற்றப் போவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுடன் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் டுடெர்டோவின் வார்த்தைகள் உறுதியான நடவடிக்கையாக மாறவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இந்தப் போர் பயிற்சியில் இரு நாட்டைச் சேர்ந்த 2,000 ராணுவத்தினர் பங்கேற்கின்றனர்.