வங்கதேசத்தில் கல்லூரி மாணவி கொலை: மாணவர்கள் போராட்டம்

வங்கதேசத்தின் வட கிழக்குப் பகுதியில், ஒரு கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் அதிக பாதுகாப்பு கோரி செவ்வாய்க்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை ROMEO GACAD/AFP/Getty Images
Image caption வங்கதேசத்தில் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத பெண்கள் தாக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது (கோப்புப்படம்)

தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி ஒரு நபர் கேட்டபோது, கதிஜா பேகம் அதனை மறுத்ததாகவும், கதிஜா தேர்வு கூடத்தில் இருந்து வெளியேறிய பின், அந்த நபர் ஒரு வெட்டுக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கதிஜா மிகவும் மோசனமான நிலையில் உள்ளார். கதிஜா தாக்கப்பட்ட போது, அதைத் தடுக்காமல், அந்த காட்சியைப் படம் பிடித்த மாணவர்கள் பற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ,திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத இளம் பெண் தாக்கப்படும் சம்பவங்கள் நான்கு முறை நடந்துள்ளன.

இதில் கதிஜாவை தாக்குதலுக்கு உள்ளான மற்ற மூவர் இறந்துவிட்டனர்.