பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் அதிகாரத்தை குறைக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகளை வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்யும் நிரந்தர உறுப்பு நாடுகளின் உரிமைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர்

சிரியாவில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த, அதுபோன்ற அதுதீவிர நடவடிக்கைகள் அவசியம் என்று சையத் ராவுத் அல்-ஹுசேன் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்வதற்கு, ஏற்கெனவே எடுக்கப்பட்ட முயற்சிகளை, சிரியா அரசுக்கு ஆதரவளிக்கும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, தனது வீ்ட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்துவிட்டது.

சிரியா அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், அது போர்க்குற்றங்களுக்கு சமமானது என்றும் சையத் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், கிளர்ச்சிக் குழுவினர் பெருமளவு ஆயுதங்களை, இலக்கில்லாமல் பயன்படுத்துவதையும் மனித உரிமை ஆணையத் தலைவர் கண்டித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்