மியான்மாரில் ஒடுக்குமுறை சட்டமொன்று ரத்து

மியான்மாரில் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுககப் பயன்படுத்தப்பட்ட கடுமையான சட்டம் ஒன்றை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மியான்மாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜனநாயக வழிமுறைகள் முன்னேற்றம்

கடந்த 1950ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகால நடவடிக்கை சட்டத்தின்படி தேசத்துரோகம் எனும் பரந்துபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் சூழல் நிலவியது.

பொது இடங்களில் தரக்குறைவாக நடந்துகொள்வது, போலிச் செய்திகளை பரப்புவது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அச்சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது.

இந்த ஆண்டு ஆங் சான் சூ தலைமையேற்கும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி பெறுப்பேற்ற பிறகு பல அடக்குமுறை சட்டங்களை ஒழிக்க மியான்மாரில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அப்படியான சட்டங்களைப் பயன்படுத்தி அக்கட்சியின் உறுப்பினர்கள் பல தசாபதங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் தற்போதைய அரசும் பழைய சட்டங்களின் சில அம்சங்களை பயன்படுத்துகிறது எனும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.