பிரிட்டனில் வெளிநாட்டு பணியாளர்கள் விவரங்களை கோரும் அமைச்சர்

பிரிட்டனின் நிறுவனங்கள், தங்களின் வெளிநாட்டு பணியாளர்கள் குறித்த தகவலை வெளியிட கட்டாயப்படுத்தும் தனது திட்டத்திற்கு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் அம்பர் ரட்.

படத்தின் காப்புரிமை Getty Images

செவ்வாய்க்கிழமையன்று ஆளும் கன்செர்வேட்டிவ் உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், பணியாளர்களை சேர்க்கும் விதிகளை கடினமாக்குவது, குடியேற்றத்தை குறைக்குமா என்பது குறித்து ஆலோசனையை தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வணிக கூட்டமைப்பு, நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு பணியாளர்கள் குறித்த விகிதத்தை காட்ட வேண்டிய அவசியம் நேரிடும் என அச்சம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஜெனரல் ஆடம் மார்ஷல், சர்வதேச பணியாளார்களை வைத்திருப்பது ஒரு அவமானச் சின்னமாக பார்க்கப்பட்டால், அது, ஒரு வருத்தத்திற்குரிய நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.