வேதியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர் மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேதியலுக்கான நோபல் வென்றுள்ள பெற்ற மூவர்

இந்த வருடம் வேதியலுக்கான நோபல் பரிசை சிறியரக மூலக்கூறு மோட்டார்களை உருவாக்கிய மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் வென்றுள்ளனர்.

ஃபிரான்ஸைச் சேர்ந்த ஷான் பியர் சோவாஷ், பிரிட்டனைச் சேர்ந்த பிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபெரிங்கா ஆகியோர், உலகின் சிறிய இயந்திரங்கள் என்று நோபல் அகடெமி வர்ணித்த இயந்திரங்கள் குறித்து ஆற்றிய பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஆற்றல் சேர்க்கப்பட்டால் கட்டுப்படுத்தப்படும் இயக்கத்தை உருவாக்கும் மூலக்கூறுகளை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அம்மாதிரியான மூலக்கூறு இயந்திரங்கள் புதிய பொருட்கள், சென்சார்கள், மற்றும் ஆற்றல் சேமிப்பு முறைகளை உருவாக்கப் பயன்படும் என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்