குடியேறிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிபந்தனையுடன் ஆப்கானுக்கு உதவியா ? மறுக்கிறார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி

ஐரோப்பாவிற்கு தப்பி வந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை மீண்டும் தங்களது நாட்டிற்கு ஆப்கான் அரசு வரவழைத்துக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன், ஐரோப்பிய ஒன்றியம் ஆப்கானிஸ்தானுக்கு நிதி கொடுப்பதாக வந்துள்ள செய்திகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர், பெடெரிகா மோகரீனி, திடமாக மறுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Sean Gallup/Getty Images)
Image caption ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர், பெடெரிகா மோகரீனி (கோப்புப்படம்)

பிரஸ்ஸல்ஸில் நடக்கும் மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய மோகரீனி, ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானுக்கு உதவி தொகையாக 1.3 பில்லியின் டாலர்கள் கொடுக்க உறுதியுடன் இருப்பதாகவும், வளர்ச்சி உதவிக்கும், குடிவரவுக்கும் எந்தத் தொடர்புக்கும் எப்போதும் இருந்ததில்லை என்றும் கூறினார்.

ஆப்கானிய தலைவர்கள் சிறப்பான சீர்திருத்தங்களைச் செய்துள்ளனர் என்று ஐ. நா. சபையின் செயலாளர், பான் கி-மூன் கூறினார்.