உயிர்காக்கும் உயர் தொழில்நுட்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயிர்காக்கும் உயர் தொழில்நுட்பம்

கர்பப்பையின் வாயில் உருவாகும் புற்றுநோயால் ஏறபடும் மரணங்களில் தொண்ணூறு சதவீதமானவை குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்கிறது.

நோய் இருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் போவதே உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது.

ஆனால் நோய் இருப்பதை ஆரம்பக்கட்டங்களிலேயே கண்டுபிடித்தால் சுலபமாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆஃப்ரிக்க நாடான தான்சானியாவில் மட்டும் ஆண்டுக்கு 4000 பெண்கள் இவ்வகை புற்றுநோயால் இறக்கின்றனர்.

இதைத் தடுக்க ஆய்வாளர்கள் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கிராமப்புறங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்போது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என அங்குள்ள மருத்துவர்கள் நம்புகின்றனர்.

இது குறித்த பிபிசியின் சிறப்புக் காணொளி