காப்புரிமை பெறப்பட்ட சோள விதைகளை திருடிய சீனருக்கு 3 ஆண்டுகள் சிறை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை திருட சதியில் ஈடுபட்டதற்காக சீனா நபர் ஒருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை பெறப்பட்ட சோள விதைகளை மோ ஹெயிலாங் என்ற அந்த நபர் சீனாவுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த விதைகள் விவசாய பெருநிறுவனங்களான டுபோன் பயோனீர் மற்றும் மொன்சான்டோ ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானதாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த விதைகளை தன்னை வேலைக்கு பணியமர்த்திய நிறுவனமான பெய்ஜீங் டபெயிங் டெக்னாலஜி குழுமத்திடம் கொடுக்க மோ திட்டமிட்டிருந்தார்.

இறுதியில், டுபோன் பயோனீர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் கொடுத்த ரகசிய தகவலின்படி, அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம், எஃப்.பி.ஐ இந்த சதி செயலை முறியடித்தனர்.

அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடுவது என்பது தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும் என்று இந்த வழக்கில் தொடர்புடைய அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.