ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பின்னணியில் இருப்பது யார்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜிம்பாப்வே அதிபர் முகாபே

ஜிம்பாப்வே அதிபர் முகாபே, ஹராரேவில் நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அரசுக்கு எதிராக நடந்துவரும் தொடர் போராட்டங்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தனது உரையில் விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டப்பட்டன.

இந் நிலையில், நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இணைய குற்றம் மசோதா உள்ளது.

அரசை சீர்குலைக்கும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களைத் தவறாக பயன்படுத்துவோரை தடுக்கும் வகையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சரிவின் விளிம்பில் ஜிம்பாப்வே பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்க ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சரிவின் விளிம்பில் ஜிம்பாப்வே பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்க ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் தாக்குதல் மற்றும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஜிம்பாவே உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்