மத்திய தரைக்கடல் நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதம் குறித்து வியன்னா மாநாடு

மத்திய தரைக்கடலை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியில் நிலவும் தீவிரவாதத்தை சமாளிக்கும் வழிகளை ஆராய ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் இன்று வியன்னாவில் சந்திக்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை JOHN MACDOUGALL/AFP/Getty Images
Image caption தீவிரவாத எதிர்ப்பு குறித்து, சமீபமாக, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மூலம் பெர்லினில் நடத்தப்பட்ட மாநாடு. (கோப்புப்படம்)

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மூலம் நடத்தப்படும் இந்த மாநாட்டில், குடியேறிகளின் பிரச்சனையை சமாளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவிற்குச் செல்ல முயற்சி செய்கின்றனர்.