தென் கொரியச் சூறாவளியில் ஏழு பேர் பலி

தென் கொரியாவைத் தாக்கிய சூறாவளியால் குறைந்தபட்சம் ஏழு பேர் இறந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Han Myung-Gu/Getty Images)
Image caption சூறாவளிக்கு பிறகு தென் கொரியாவில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள்

இறந்தவர்களில் ஒரு தீயணைப்புப் படை வீரரும் அடங்குவார்.

சோல் நகரத்தின் தென் கிழக்குப் பகுதியில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உல்சான் என்ற நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அவரை வெள்ளம் அடித்துச் சென்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்ய, இயந்திர பழுது நீக்குவோர் முயன்று வருவதால், உல்சானில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலைகளில் இரண்டில் ஒன்று வியாழனன்று மூடப்பட்டிருந்தது.

சூறாவளி சாபாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பு, தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்