பிரிட்டனில் கட்சி கூட்டத்தில் மோதல்: மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர்

பிரிட்டனின் சுதந்திரக் கட்சியின் சந்திப்பில் சக உறுப்பினர்களுடன் நடந்த மோதல்களுக்குப் பிறகு ஸ்டார்ஸ்ப்ர்க் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரிட்டன் உறுப்பினரின் உடல்நலம் தேரிவருகிறது.

படத்தின் காப்புரிமை PA
Image caption ஸ்டீஃபன் வூல்ஃபி

ஸ்டீஃபன் வூல்ஃபி தான் சிரித்துக் கொண்டிருந்ததாகவும், பிரகாசமாக இருந்ததாகவும், தெரிவித்தார் ஆனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதையும் அதனால் தான் தலையில் முட்டிக் கொண்டதையும் அவர் குறிப்பிடவில்லை.,

தனது மேலாடையையும், பெட்டியையும் ஏந்தியவாறு நாடாளுமன்றத்தின் வெளியே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

வூல்ஃபி இரண்டுமுறை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கான பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்த பிரிட்டனின் சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை வூல்ஃபி ஏற்பதில் அவருக்கு நேர்மறையான சூழல் இல்லை.

அவரின் அரசியல் நேர்மை குறித்த கேள்விகள் வாக்குவாதத்தை தூண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது.