மேத்யூ சூறாவளி, புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் மில்லியன் கணக்கானவர்கள் வெளியேற்றம்

சூறாவளி மேத்யூ புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியை கடப்பதற்கு முன்னால் , அங்கிருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறாதவர்கள் அவர்களின் வீடுகளுக்குள் இருக்குமாறும், புயல் கடக்கும் வரை காத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

புயல் நிலப்பரப்பைக் கடக்காமல் இருந்தாலும் கூட, அது கடல் நீரைக் கரைக்கு கொண்டுவந்து சேதத்தை விளைவிக்கும், கடலோரத்தில் வசிக்கும் சமூகங்களைத் தாக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images)

அலைகள் ஐந்து மீட்டர் உயரத்திற்கு மேலெழும்பும். சூறாவளி மேத்யூவின் மிக மோசமான தாக்கத்தில் இருந்து தென் புளோரிடா தப்பித்திருந்தாலும், ஜோர்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளை அது கடந்து செல்வதற்கு முன், மத்திய மற்றும் வடக்கு புளோரிடா கடற்கரைப் பகுதிகளை பெரிய அளவில் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜார்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்