ஆசிய சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது பிரிட்டனின் பவுண்டு

ஆசிய சந்தைகளில், ''பிளாஷ் கிராஷ்''(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு பெரிய சரிவைச் சந்தித்துள்ளது

ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து மீள்வதற்கு முன் யூரோ பண மதிப்பிற்குக் எதிராகவும் சரிந்தது.

இந்த ஏற்ற இறக்கத்திற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகத் தயாராவதால், அதனோடு உள்ள பேச்சுவார்த்தைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் கூறியதைத் தொடர்ந்து இந்தச் சரிவு தொடங்கியது என்று பி பி சி செய்தியாளர் கூறினார்.