ரஷ்யாவுக்கு எதிராக போர் குற்றப் புலனாய்வை கோரும் ஜான் கெர்ரி

சிரியா அரசுக்கு ஆதரவான ரஷ்யாவின் செயல்பாடுகளுக்காக, போர் குற்றங்களுக்கான புலனாய்வை கோருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கொரி தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரஷ்யா மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது விபத்திற்கு அப்பாற்பட்டது என்று ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

அலெப்போ நகரிலுள்ள பொது மக்களை பயமுறுத்தி, அவர்களின் ராணுவ இலக்குகளுக்கு எதிராக வரும் யாராக இருந்தாலும் கொன்று விடுகின்ற இலக்கை போர் உத்தியாக ரஷ்யாவும், சிரியாவும் வைத்திருப்பதாக கெர்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, அலெப்போவில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருகின்ற ஐநாவின் புதிய திட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது.

Image caption சிரியா அரசு ஆதரவான ரஷ்யாவின் செல்பாடுகளுக்கு போர் குற்ற புலனாய்வை கோருவதாக ஜான் கெர்ரி தெரிவிப்பு

முன்னாள் நுஸ்ரா முன்னணி படைப்பிரிவின் ஆயுதப்படை அலெப்போவிலிருந்து பின்வாங்க வேண்டுமென சிரியாவுக்கான ஐநாவின் தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்துரா தெரிவித்திருந்தார்.

ஆனால், அவ்வாறு செய்வது கௌரவக் குறைவான சரணடைதலாக இருக்கும் என்று இந்த ஜிகாதி படைப்பிரிவு நிராகரித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்