பிரிட்டன் வெளியேற்றம்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கருத்து

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுகின்ற நிபந்தனைகளில், அது வைக்கின்ற கோரிக்கைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜீன் கிளாட் ஜக்னரின் ஆணையம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான விபரமான பேச்சுவார்த்தைகளை நடத்தும்

பிரிட்டன் ஒரு காலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் இன்னொரு காலை வெளியேயும் வைத்திருக்க முடியாது என்று ஜீன் கிளாட் ஜக்னர் தெரிவித்திருக்கிறார்.

குடிபெயர்ந்து வாழும் பிரிட்டிஷ் குழு ஒன்று அவருக்கு எதிராக சட்டபூர்வச் சவால் விடுத்துள்ளதை அடுத்து அவருடைய இந்தக் கருத்து வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஸ்பெயின், நாடு கடந்து குடியேறியுள்ள அதிக பிரிட்டிஷ் மக்களை வரவேற்றுள்ளது

முறையான பேச்சுவார்த்தையின் தொடக்கத்தை குறிக்கின்ற சட்டப்பிரிவு 50-ஐ பயன்படுத்தாத வரை ஜக்கிய ராஜ்யத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது என்பதை நீக்கி தலைவரான ஜக்னர் ஆணையிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழுகின்ற பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டோரின் நிலைமை பற்றிய விவாதங்களை உடனடியாக தொடங்க வேண்டும் என்று இந்தக் குழுவினர் விரும்புகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்