துருக்கி: தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட பெண் உள்பட 3 பேர் கைது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்தீஷ் பிகேகே குழுவை சேர்ந்த தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழனன்று, இஸ்தான்புல் காவல் நிலையம் அருகே அந்த பெண் ஒரு வெடிகுண்டை வெடிக்க செய்ததாக நம்பப்படுகிறது.

துருக்கியின் மத்திய மாகாணமான அக்சராயில் அந்த பெண் உட்பட மேலும் இரண்டு பேரை போலிசார் கைது செய்தனர்..

இவர்களை தவிர, இஸ்தான்புல்லில் மேலும் மூன்று பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இதில், 10 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்