நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மேத்யூ சூறாவளி (புகைப்படத் தொகுப்பு)

கரிபியன் கடற்பகுதியில் கடந்த ஒரு தசாப்தத்தில் உருவான மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்று இந்த மேத்யூ சூறாவளி. ஜமைக்கா, ஹேய்ட்டி, க்யூபா, பஹாமஸ் என்று வீரியம் குறையாமல் பயணித்த மேத்யூ சூறாவளி தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடாவை தாக்க தயாராகி வருகிறது. இதுவரை அது ஏற்படுத்திய பாதிப்புகளை விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கரிபியன் கடலில் ஆக்ரோஷ மேத்யூ சூறாவளி ஜமைக்கா, ஹேய்ட்டி மற்றும் கியூபாவை நோக்கி நகர்ந்த போது எடுக்கப்பட்ட செய்ற்கைக்கோள் புகைப்படம்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹேய்ட்டியை தாக்கிய மேத்யூ சூறாவளி வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சமீப ஆண்டுகளில் உருவான மிக சக்தி வாய்ந்த அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக மேத்யூ கருதப்படுகிறது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஹேய்ட்டி மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேத்யூ சூறாவளி கிழக்கு கியூபாவை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹேய்ட்டியைத் தாக்கிய மேத்யூ சூறாவளி, மணிக்கு சுமார் 220 கிமீ வேகத்துக்கு மேல் வீசி, பயிர்களை அழித்தும், வீடுகளை நாசப்படுத்தியும் சென்றது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஹேய்ட்டியை கடும் பூகம்பம் ஒன்று தாக்கியதிலிருந்து அந்நாட்டைத் தாக்கும் அடுத்த பெரிய இயற்கை சீற்றம் இது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபுளோரிடா மற்றும் வடக்கு கரோலினாவில் கடற்கரை பகுதிகளில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டன.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென்மேற்கு ஹேய்ட்டியில் மேத்யூ சூறவாளியின் ஆக்ரோஷத்தில் நிலைகுலைந்த மரங்கள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிழக்கு கியூபாவில் சாலை ஒன்றை துவம்சம் செய்த மேத்யூ சூறாவளி
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் மக்களை முடிந்தவரை விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தி இருந்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சூறாவளி் வரும் என முன்னறிவிப்பினை அடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விற்றுத்தீர்ந்த காட்சி
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபுளோரிடாவில் புயல் பாதுகாப்பு இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள செல்லப்பிராணிகள்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேத்யூ சூறாவளி ஃபுளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியை கடப்பதற்கு முன்னால், அங்கிருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெளியேறாதவர்கள் அவர்களின் வீடுகளுக்குள் இருக்குமாறும், புயல் கடக்கும் வரை காத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபுளோரிடாவில் டிட்சுவில்லில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புயல் நிலப்பரப்பைக் கடக்காமல் இருந்தாலும் கூட, அது கடல் நீரைக் கரைக்கு கொண்டுவந்து சேதத்தை விளைவிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேத்யூ சூறாவளி இன்று ஃபுளோரிடாவில் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்