ஏமனில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவிக்கும் 3 மில்லியன் குழந்தைகள்: ஐ.நா குழு அறிக்கை

ஏமனில் செளதி தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் குழு ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஏமனில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவிக்கும் 3 மில்லியன் குழந்தைகள்: ஐ.நா குழு கவலை

குழந்தைகளின் உரிமை குறித்து அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டும் அல்லது முடமாக்கப்பட்டும் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டினியால் தவித்துவரும் பொது மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்தும் அது விமர்சித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தற்போது, அங்கு ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான நெருக்கடி நிலை காரணமாக 30 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், செளதி தலைமையிலான கூட்டு படையினர், தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்களை குறிவைத்து தாக்கவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்