இராக்கிலிருந்து துருக்கி படைகளை வாபஸ் பெற கோருவது ஆத்திரமூட்டும் செயல்: துருக்கி பிரதமர்

இராக் நிலப்பரப்பிலிருந்து துருக்கி படைகள் வாபஸ் பெற வேண்டும் என்ற அதன் கோரிக்கை அபாயகரமானது மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என்று துருக்கி தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கி பிரதமர் பினாலி இல்டிரீம்

வட இராக்கில் தங்கள் நாட்டு படைகள் பயனுள்ள வேலைகளை செய்து வருவதாக துருக்கி பிரதமர் பினாலி இல்டிரீம் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற வட இராக்கில் உள்ள துருக்கி ராணுவ தளத்தில் உள்ளூர் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பல மாதங்களுக்கு முன்பு தங்களுடைய அனுமதியின்றி துருக்கி படையினர் தங்களை நிலைநிறுத்தி கொண்டுள்ளதாக இராக் கூறுகிறது.

மேலும், அந்த படைகள் ஆக்கிரமிப்பு படைகள் என்றும், அவர்களின் பிரசன்னம் புதிய மோதலை தொடங்கும் என்றும் இராக் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்