ஹெய்ட்டியில் 'மேத்யூ' ஏற்படுத்திய அவலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹெய்ட்டியில் 'மேத்யூ' ஏற்படுத்திய அவலம்

மேத்யூ சூறாவளி ஹெய்ட்டியை தாக்கிய பிறகு பஹாமாஸ் வழியாக பயணித்து அமெரிக்காவின் ஃபுளோரிடாவை நோக்கி நகர்கிறது.

இச்சூறாவளியின் காரணமாக ஹெய்ட்டியில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. 400க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனும் அச்சங்கள் வலுத்து வருகின்றன.

நாட்டின் தென்மேற்கு பகுதிக் கரையோரத்தில் பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன.

தலைநகர் போட் அ பிரின்ஸ் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.