11 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் பற்றி மோசமான கருத்துக்களை பேசியதற்கு மன்னிப்பு கோரிய டிரம்ப்

பெண்கள் குறித்து மோசமான கருத்துக்களை 11 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரிவித்ததற்காக அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர், டொனால்டு டிரம்ப் மன்னிப்பு கோரினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர், டொனால்டு டிரம்ப்

அந்தப் பதிவில், டிரம்ப் பெண்களிடம் மோசமாகத் தான் நடந்துகொண்டது மற்றும் உடலுறவு கொள்ள முயன்றது பற்றி தற்புழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இந்தக் கருத்துகளுக்கு, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் பால் ரையான் உட்பட மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரையான் இன்று (சனிக்கிழமை) ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள டிரம்ப்புக்கு விடுத்திருந்த அழைப்பைத் திரும்பப்பெற்றார்.

இந்த நிகழ்வில் அவர்கள் இருவரும் ஒரே மேடையைப் பகிர வேண்டிய நிலை இருந்தது.

டிரம்ப் தான் ஒரு நல்ல ஆணாக இருக்க உறுதியளித்து, மன்னிப்பு கேட்கும் ஒரு அறிக்கையை வாசித்தார். இது நேரலையில் ஒளிபரப்பப்படாமல் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது . அதிலும் டிரம்ப் அறிவிப்பாளர்கள் படிக்கும் திரையில் இருந்து எழுதப்பட்ட வாசகங்களை படித்தார் .

ஆனால் அவர் பில் கிளின்டன் பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டினார்.