துருக்கியில் ஒரு பெண் உள்பட இரு தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகள் பலி

துருக்கியின் தலைநகர் அங்காராவில் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரு தற்கொலை குண்டுத்தாக்குதல்தாரிகள் தங்களை தாங்களே வெடிக்க வைத்து, இறந்தனர்.

படத்தின் காப்புரிமை ADEM ALTAN/AFP/Getty Images
Image caption தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகள் பலியான இடத்தை பார்வையிடும் தடயவியல் அதிகாரிகள்

மற்ற சேதங்கள் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

அந்த இரண்டு தீவிரவாதிகளும் ஒரு கார் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டனர் என்று அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான அனடோல் தெரிவித்துள்ளது.

பிகேகே என்று அறியப்படும் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒர் ஆண் மற்றும் ஒரு பெண்ணும் அங்காரா நகரத்தில் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் தங்களது காரில் துருக்கிக் கொடியைப் பறக்கவிட்டதாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது நபரை போலிசார் தேடி வருகின்றனர்.

பி கே கே மற்றும் அரசுக்கு இடையான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு முறிந்ததில் இருந்து, துருக்கி முழுவதும் குர்திஷ் தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.