சிரியாவின் வடக்கில் கிளிர்ச்சியாளர்களோடு நடந்த சண்டையில் சிரியா அரச படைகள் முன்னேற்றம்

சிரியாவின் வடக்கு மாகாணமான ஹமாவில் கிளர்ச்சியாளர்களோடு நடந்த சண்டையில் சிரிய அரச படைகள் முன்னேறியதாகச் செய்திகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images)
Image caption சிரியாவின் வடக்கு மாகாணமாத்தில் ஹமாசில் அரச படைகள் கிளர்ச்சியாளர்களோடு நடந்த சண்டையில் முன்னேறியது. (கோப்புப்படம்)

கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தப் பகுதியில் கிளர்ச்சிப் படைகள் தொடங்கிய சண்டையில் முன்னேற்றம் அடைந்தன.

ஆனால், பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரச சார்பு படைகள் எதிராளிகளை முறியடித்து பல நகரங்கள் மாற்றம் கிராமங்களை பிடித்துவிட்டன என்று தெரிவித்துள்ளது.

தங்களது குழுக்களுக்குள் நடந்த உட்பூசல்கள் கிளர்ச்சியாளர்களை பலவீனமாக்கியது என்றும் இதை எதிர்தரப்பு பயன்படுத்திக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.