மேத்யூ சூறாவளி: ஹேய்ட்டியில் பலி எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மேத்யூ சூறாவளியால் ஹேய்ட்டியில் பலி எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

கடந்த செவ்வாய் கிழமையன்று, ஹேய்ட்டியின் தென்மேற்கு பகுதி முழுவதையும் கடுமையாக சேதப்படுத்திய மேத்யூ சூறாவளி காரணமாக சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில், தென் மேற்கு ஹேய்ட்டியில் அணுக முடியாத வகையில் இருக்கக்கூடிய பகுதிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தூர கடலோர நகரங்களில், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சில பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், அனைத்து கட்டடங்களும் சரிந்து விழுந்திருப்பதாகவும் தொண்டு நிறுவன பணியாளாரான கேட் கோரிகன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹெலிகாப்டர்கள், புல்டோசர்கள், தண்ணீர் வழங்கும் வாகனங்கள் மற்றும் மருத்துவ உதவிகளையும், நிவாரண உதவிகளில் ஈடுபட துருப்புகளையும் அமெரிக்கா அனுப்பி உள்ளது.

மேத்யூ சூறாவளி தற்போது வலுவிழந்து வரும் நிலையில், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பலமான காற்று மற்றும் அதிக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மேத்யூ சூறாவளி (புகைப்படத் தொகுப்பு)

தொடர்புடைய தலைப்புகள்