விளையாட்டு போதை மருந்து மோசடிகளை கண்டறிய புதிய ஒழுங்குமுறைகள்: சர்வதேச ஒலிம்பிக் குழு கோரிக்கை

விளையாட்டு போட்டிகளில் போதை மருந்து மோசடிகளை கண்டறிய புதிய ஒழுங்குமுறைகளை அமைக்க வேண்டும் என்று உலக ஊக்க மருந்து நிறுவனத்தை ஒலிம்பிக் உச்சிமாநாடு கேட்டு கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இன்னும் வலுவான, ஆற்றல்மிக்க, வெளிப்படைத்தன்மை மற்றும் பொருத்தமான ஊக்க மருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறையானது தேசிய நலன்களுக்கு அப்பாற்பட்டு, சுதந்திரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அரசு ஆதரவு பெற்ற ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவை அனுமதிக்கலாமா வேண்டாமா என்ற முடிவில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் இடையேயான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்