மொராக்கோ தேர்தலில் ஆளும் இஸ்லாமியவாத கட்சி வெற்றி

மோரோக்கோவை ஆளுகின்ற இஸ்லாமியவாத நீதி மற்றும் வளர்ச்சி கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption உள்துறை அமைச்சகத்தின் படி 43 சதவீதத்தினர் வாக்களிப்பு

இதுவரை எண்ணப்பட்டுள்ள 90 சதவீத வாக்குகளில் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியானது, அதனுடைய போட்டி கட்சியான 80 இருக்கைகளை வென்றிருக்கும் உண்மை மற்றும் நவீனத்துவ கட்சியை விட முன்னிலை பெற்று 99 இருக்கைகைளை வென்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அப்தில்லா பென்கிரானி (நடுவில்) நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் வெற்றியை புகழ்ந்துள்ளார்

இரண்டாவது முறையாக ஆட்சியமைப்பது நாட்டின் பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல ஏதுவாக இருக்கும் என்று நீதி மற்றும் வளர்ச்சி கட்சி தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கட்சிகளின் சின்னங்கள் படிக்காத வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை இடுவதற்கு உதவியிருக்கிறது

2011 ஆம் ஆண்டு அரசியல் சாசன சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்னர், மொராக்கோவில் நடைபெற்றுள்ள இரண்டாவது தேர்தல் இதுவாகும்.

16 மில்லியன் மொராக்கோ மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்