மேற்குப்புற எல்லையில் அணுசக்தி ஏவுகணைகளை நிறுத்தியிருக்கும் ரஷ்யா

நேட்டோவின் உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியாவின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் தன்னுடைய மேற்குப்புற எல்லையான கலினின்கிராடுக்கு அணுசக்தி ஏவுகணைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption இஸ்கான்டர் ஏவுகணையால் (கோப்புப்படம்) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை தாக்க முடியும்

இஸ்கான்டர் ஏவுகணைகளை அங்கு நிறுத்தி இருப்பது ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாகும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், சிரியா மற்றும் யுக்ரைனிலுள்ள பிரச்சனை தொடர்பாக மேற்குலக நாடுகள் விட்டு கொடுக்க வேண்டுமென அழுத்தம்கொடுக்க ரஷ்யா முயல்வதாக லிதுவேனிய வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் செயல்பாடுகள் ஆபத்தானதாக உள்ளதாக போலந்து பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு ஒரு ராணுவ பயிற்சி தொடரின்போது, ரஷ்யா இஸ்கான்டர் ஏவுகணைகளை கலினின்கிராடுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்