டென்மார்க் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரின் பேட்டிகளை கொண்ட புத்தத்தை விற்க தடை

டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பு, தேசிய அளவிலான ஒரு செய்தித்தாள் மற்றும் வானொலி நிலையத்தை ஒரு புத்தகத்தின் பகுதிகளை வெளியிட தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏனெனில், அந்தப் புத்தகம் ரகசியங்களை கொண்டிருக்கலாம் என்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேகப் சாஃப்

டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேகப் சாஃப்பின் பேட்டிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள அந்தப் புத்தகத்தை டென்மார்க்கில் உள்ள 40 கடைகள் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா பிளாடட் (Ekstra Bladet) செய்தித்தாளின் தலைமை ஆசிரியர், போல் மாட்சன், டென்மார்க் நாட்டின் உளவு அமைப்பு 'பத்திரிகை சுதந்திரம் உள்ளபோது, பத்திரிகைகள் எவற்றை அச்சிட முடியும் என 'கட்டளையிடுவது நகைப்பிற்கிடமானது' என்று கூறியுள்ளார்.