ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதியை தேடிவரும் போலிஸார்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்திற்குள்ளான சிரியாவைச் சேர்ந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

ஜெர்மனியின் கிழக்கில் உள்ள கெம்னிட்ஸ் நகரில், அவரின் வீட்டை சோதனையிட்டதில் பெருமளவு வெடிபொருட்களை கண்டறிந்ததையடுத்து போலிஸாரால் அவர் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேடப்பட்டுவரும் நபரான 22 வயதாகும் ஜபெர் அல்பக்கர் சோதனையிட்ட போது வீட்டில் இல்லை; சந்தேகத்திற்குரிய நபருடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் சமீபத்தில் வந்த அகதிகள் கூட்டத்தில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரும் வந்ததாக சில ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.