ஏமன் தாக்குதல்: சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஏமனில் இறுதிச் சடங்கு ஒன்றில் நடைபெற்ற தாக்குதலுக்கு சவுதி அரேபியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது; இந்த தாக்குதலில் 140 கொல்லப்பட்டுள்ளனர் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஏமன் அரசுடன் கூட்டணியில் இருக்கும் சவுதி தலைமையிலான கூட்டணிக்கு, தான் அளிக்கும் ஆதரவு மறு ஆய்வு செய்யப்படும் எனவும், மேலும் தனது ஆதரவைக் குறைக்கக்கூடும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வருத்தத்துக்குரிய இந்த நிகழ்ச்சி தொடர்பாக, அமெரிக்காவுடன் இணைந்து விசாரணையை தொடங்க, தனது கூட்டணி தயாராக உள்ளது என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்ள ஐ.நாவின் மனித நேய ஒருங்கிணைப்பாளர், இறுதி சடங்கில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உதவி பணியாளர்கள் சீற்றத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.