ஐ.நா., தீர்மானத்தை ஏற்க ரஷியா மறுப்பு: சிரியாவில் தொடரும் தாக்குதல்கள்

அலெப்போ நகரில் நடைபெற்று வரும் வான் தாக்குதல்களை நிறுத்த கோரும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை ரஷியா தனது வெட்டு வாக்கைப் பயன்படுத்தி தோற்கடித்த பிறகு, அங்கு சிரிய அரசு ஆதரவு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே மோதல்கள் தொடர்கின்றன.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் மாவட்டங்களை திரும்பக் கைப்பற்றும் முனைப்புடன் ஒவ்வொரு தெருவிலும் சண்டையிட்டு வரும் அரசு ஆதரவு படைகளுக்கு ஆதரவாக, ரஷிய விமானங்கள் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் நடந்து வரும் போர் காலகட்டத்தில், நேற்றிரவு ஐ.நாவின் தீர்மானத்தை ரஷியா தனது வெட்டு வாக்கைப் பிரயோகித்து தோற்கடித்தது ஐந்தாவது முறையாகும்.

அலெப்போவில் நடைபெறும் ரஷிய ஆதரவு தாக்குதல்களை குவெர்னிக்கா, ஸ்ரபெரெனிட்சா, க்ரோஸ்னி ஆகிய இடங்களில் நடந்த படுகொலைகளுடன் ஒப்பிட்டுள்ளார் ஃபிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷான் மார்க் ஐரோ.