ஆப்கான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption ஆப்கான் பாதுகாப்பு படையினர் (கோப்புப் படம்)

ஆப்கான் பாதுகாப்பு படையினர் மற்றும் தாலிபான் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் பாக்லான் மாகாணத்தின் ஒரு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துருப்புகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் பணியில் விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஆப்கான் பாதுகாப்பு அதிகாரிகள், தாங்கள் இந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் கூறியுள்ளதை மறுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் தாலிபான் போராளிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.