சீன சந்தையைக் குறி வைத்து இணையும் ஹாலிவுட் மற்றும் சீன தயாரிப்பு நிறுவனங்கள்

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல் பர்க், இணை உரிமையாளராக இருக்கும் பொழுதுபோக்கு நிறுவனம், முக்கிய சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல் பர்க்

மேற்கத்திய மற்றும் சீன சந்தைகளில் திரைப்படங்களை தயாரிக்க, ஆம்பிலின் நிறுவனம் அலிபாபா நிறுவனத்துடன் கூட்டு சேர உள்ளது.

அலிபாபா பிக்சர்ஸின் தலைவர், இணைய வர்த்தக கோடீஸ்வரர் ஜாக் மா, ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆம்பிலின் நிறுவனத்தின் சிறிய பங்கு ஒன்றை பெறுவார்.

ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

வளர்ந்து வரும் சீன திரைப்பட துறையில் லாபம் காணும் முயற்சியாக, ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணையும் பிரபல கூட்டு நடவடிக்கைகளில் இது சமீபத்திய முயற்சியாகும்.