துருக்கி: கார் வெடிகுண்டு தாக்குதலில் ஆறு துருக்கி படையினர் பலி

துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே கார் வெடிகுண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த தாக்குதலில், ஆறு துருக்கி படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் பலர் காயமடைந்திருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை பிகேகே குழுவை சேர்ந்த குர்தீஷ் தீவிரவாதிகள் நடத்தி இருப்பதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இராக் மற்றும் இரான் உடனான எல்லைப்பகுதிக்கு அருகே உள்ள மலை பிரதேச பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பிகேகே தீவிரவாதிகள் இந்த பகுதிகளில் நீண்ட காலமாக இயங்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்று முறிந்ததைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்