மியான்மார் எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலில் 14 பேர் பலி

மியான்மாரின் வங்கதேசத்துடனான எல்லைப்பகுதியை ஒட்டி இருந்த மூன்று காவல் நிலைகள் மீது ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது போல தோன்றும் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கொல்லப்பட்ட 14 பேரில், 9 பர்மிய போலிஸ் அதிகாரிகளும் அடங்குவார்கள் என்று பிபிசியிடம் மியான்மாரில் பதற்றம் மிகுந்த ரக்கைன் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகாலை தாக்குதல்களை நிகழ்த்தியது யார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆயினும், தாக்குதல்தாரிகள் அங்கிருந்த துப்பாக்கிகளைத் திருடிச்சென்று, நிலைகளை சூறையாடியது போல தோன்றுகிறது.

மியான்மாரில் உள்ள பௌத்த மற்றும் இஸ்லாமிய ரோஹின்ஜா மக்களிடையே இடையே அடிக்கடி பதற்றம் நிலவும் பகுதியாக ரக்கைன் உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்